வான விண்மீன்கள் ஒளிரும் கருவிழிகள்;
நிலவின் ஒளிக்கிரணம் விஞ்சும் சிறுமுகங்கள்;
அச்சில் வார்க்காத பசும்பொன் சிற்பங்கள்;
ஆதரிக்க ஆளில்லா அழகிய சித்திரங்கள்!
கால சுழற்சியில் மொட்டவிழ்ந்த நித்திலங்கள்;
வாழத்துடிக்கையில் வாஞ்சையார் யாருமிலர்!
பணமெனும் சிறுமைப் பேய் பாரினை ஆட்டுவதால் பவித்திர மக்கள் பாவியாய் ஆயினரோ!?
குத்து விளக்கேற்ற குலமகள் குடியேர-
கொத்தாய் பொருள்கூட்டி தட்சணை கேட்கின்றார்!
இளமைக் காலத்தின் இன்பக் கிளர்ச்சியுடன்
மணக்கோலம் பூண்டு மங்கல நாணேற்க,
சோகத் தண்ணீரில் இம் மீனழுதால் - வெள்ளமாயோடும்
கண்ணீர் தெரியுமா?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக